×

புகையில்லா போகி கொண்டாட நகராட்சி 39 வார்டுகளில் குப்பை சேகரிப்பு மையம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட, நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான தைப்பொங்கல், வரும் 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை (14ம் தேதி) போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என, நாமக்கல் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதையொட்டி, நாமக்கல் நகராட்சி, ராமாபுரம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு துப்புரவு அலுவலர் திருமூர்த்தி தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடப் படுவதன் நோக்கம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். இதில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் கூறியதாவது: நாமக்கல் நகரில் உள்ள பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை, இதர குப்பை என தனித்தனியாக பிரித்து, நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், குப்பைகளை பொது இடங்கள், காலியிடங்களில் வீசக் கூடாது. குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்க கூடாது. பொதுமக்களின் வசதிக்காக நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வாரசந்தை வளாகம், சேந்தமங்கலம் ரோடு, கொசவம்பட்டி ரோஜா நகர், கலவை உரகிடங்கு பகுதிகளில் அனைத்து நுண்ணுயிர் செயலாக்க மையங்களில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள தேவையில்லாத கழிவுகளை நேரடியாக குப்பை சேகரிப்பு மையங்கள் அல்லது நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசம் வழங்கி புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும். நாமக்கல் நகராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், சுற்றுப்புறங்கள் மாசடையாமல் இருக்கவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு கமிஷனர் சென்னுகிருஷ்ணன் தெரிவித்தார். நாமக்கல் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என, நாமக்கல் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் நகராட்சி, ராமாபுரம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

The post புகையில்லா போகி கொண்டாட நகராட்சி 39 வார்டுகளில் குப்பை சேகரிப்பு மையம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Bogi festival ,Thai Pongal ,collection ,Bogi ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று