×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், பொங்கல் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து இன்று 1,901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முதல் நாளில் 1.50 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அதைத் தவிர கார்களிலும், வாகனங்களிலும் ஏராளமானவர்கள் சென்றதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெருக்கடி இருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Klampakkam ,Pongal festival ,Chennai ,GST ,Coimbedu ,K. K. ,Nagar ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...