×

அலங்காநல்லூர், பாலமேட்டில் சிறப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு

 

மதுரை, ஜன. 13: மாவட்டத்தில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் வெகுசிறப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று நேரில் ஆய்வு செய்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். தைப்பொங்கலை முன்னிட்டு ஜன.15ல் மதுரை, அவனியாபுரத்தில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பிலும், ஜன.16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் கிராம கமிட்டியினரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இவ்வகையில் பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு கார் உட்பட பரிசுகள் வழங்கிட, அந்தந்த கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த பரிசுகளை யார் வழங்கினார்கள் என்பது, சம்பந்தப்பட்டவர்களின் பெயருடன் அறிவிக்கப்படும்.

மேலும் பரிசு வழங்கும் பணிகளை முறையாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட திமுக அவை தலைவர் எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன். துணைத் தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் மலைச்சாமி, பிரபு, ஜோதி தங்கமணி. அலங்காநல்லூர் யூனியன் சேர்மன் பஞ்சு அழகு, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அலங்காநல்லூர், பாலமேட்டில் சிறப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Alankanallur, ,Balamet ,Minister ,P. Murthy ,Madurai ,B. Murthy ,Alanganallur ,Thai ,Madurai, Avaniyapuram ,Municipal Corporation ,District Administration ,Palamed ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்