×

கீழப்பாண்டி அரசு பள்ளியில் பொங்கல் விழா

 

முத்துப்பேட்டை, ஜன. 13: தமிழர் திருநாளை கொண்டாடும் வகையில் முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாள் பாரம்பரியத்தின் அடையாளம், உழவர்களுக்கு, கால்நடைகளுக்கு, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உமாராணி எடுத்துரைத்தார். இதில் ஆசிரியர்கள் செல்வகுமார், சீனிவாசன், மாதவன், பைரவி, சங்கீதா மற்றும் சத்துணவு பணியாளர்கள் மலர்கொடி, கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம் வழங்கப்பட்டது. பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது.

The post கீழப்பாண்டி அரசு பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Geezapandi Government School ,Muthuppet ,Pongal ,Geezhapandi ,Panchayat Union ,Middle ,School ,Geezhapandi Government School ,
× RELATED நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா