×

தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டியில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

 

வல்லம்,ஜன.13: தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் குருவாடிப்பட்டியை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் நிலக்கடலை பயிரின் உயர்விளைச்சல் ரகங்கள் தேர்வு செய்வது, பருவத்திற்கு ஏற்ப ரகங்கள் தேர்வு செய்வது, விதை நேர்த்தி செய்தல், மண்புழு உரம் பயன்படுத்துதல், ஜிப்சம் இடுவதால் ஏற்படும் நன்மைகள், உயிர்உரம் பயன்படுத்துவது, உயிரியில் காரணிகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துதல், நுண்ணூட்டச்சத்துகளின் முக்கியதுவம் குறித்து விவசாயிகளுக்கு தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் பயிற்சியளித்தார்.

இப்பயிற்சியில் வேளாண் அலுவலர்கள் வினோதினி, தினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி வேளாண் அலுவலர் ஞானசுந்தர், விவசாயிகளை வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாசுதேவன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், புனிதா அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.

The post தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டியில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kuruvadipatti ,Thanjavur ,Vallam ,Guruvadipatti ,
× RELATED தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை