- சமத்துப் பொங்கல்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- சமத்து பொங்கல் விழா
- கலெக்டர்
- முருகேஷ்
- தைத்ருனல்
- போகி பொங்கல்
- தாய்
- திருனல்
- மதுப்
- பொங்கல்
- கனம்
திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, பல்வேறு போட்டிகளில் கலெக்டர் முருகேஷ் பங்கேற்றார். தமிழர் திருநாளான தைத்திருநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் தொடர் கொண்டாட்டமாக இவ்விழா நடைபெற உள்ளது. அதையொட்டி, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விடுமுறை நாட்கள் தொடங்கும் முன்பே உற்சாக கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதில், கலெக்டர் பா.முருகேஷ், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், ஆர்டிஓ மந்தாகினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல் உள்ளிட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்.
அப்போது, கலெக்டர் அலுவலகம் முன்பு மண் பானையில் பச்சரிசி பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கத்துடன் கொண்டாடினர். அதையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வண்ண கோலங்கள் தீட்டப்பட்டு, மலர்கள் மற்றும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், கயிறு இழுத்தல், உரியடி, இசை நாற்காலி, எலுமிச்சை கரண்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டிச்சட்டையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட கலெக்டர் முருகேஷ், கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்டார். அவரது அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது. மேலும், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆகியோர் உரியடியில் கலந்து கொண்டனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
The post சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் போட்டிகளில் பங்கேற்று கலெக்டர் உற்சாகம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.