×

மேற்கு மாவட்ட திமுக சார்பில் பயிற்சி வகுப்பு

அரூர், ஜன.13: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் இன்று(13ம் தேதி) காலை 9 மணிக்கு கம்பைநல்லூர் லட்சுமிநாராயணா திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இம்முகாமில் திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொழிலாளரணி, வழக்கறிஞரணி, பொறியாளரணி, மருத்துவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாய தொழிலாளரணி, ஆதிதிராவிடர் நல அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு அணி, தொண்டரணி, நெசவாளரணி, வர்த்தகரணி, அமைப்புசாரா ஓட்டுநரணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, மீனவரணி உள்ளிட்ட திமுக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர், துணைத்தலைவர், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், தங்களை தொடர்பு கொள்ளும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளிடம் உங்களுக்கென கொடுக்கப்பட்ட படிவத்தில், அனைத்து நிர்வாகிகளின் சமூக வலைத்தள ஊடகங்களின் தகவல்களை லிங்க் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post மேற்கு மாவட்ட திமுக சார்பில் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : West District DMK ,Aroor ,Dharmapuri West District DMK ,Palaniappan ,Campinallur Lakshminarayana Wedding Hall ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...