×

கதவை பூட்டிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த இன்ஜினியர்

 

கரூர்,ஜன.13:தேனிமாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் (26). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இவர், சில மாதங்களாக மனநிலையால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இவரது உறவினர்கள் ரஞ்சித்குமாரை பல்வேறு கோயில்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளனர். நேற்றுமுன்தினம் கரூர் தமிழ்நகரில் வசிக்கும் உறவினர் மனோகரன் வீட்டுக்கு, மகன் ரஞ்சித்குமாருடன் ரவிச்சந்திரன் வந்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில், வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று இருந்த நேரத்தில் ரஞ்சித்குமார், வீட்டின் அனைத்து கதவுகளையும் சாத்திக்கொண்டு உடலை கம்பியால் கிழித்துக்கொள்ள போகிறேன் என சத்தம் போட்டுள்ளார். இதனால், அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து கதவை திறக்க முயன்றும் முடியவில்லை. இதுதொடர்பாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட உதவி அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து வீரர்கள், ரஞ்சித்குமாரிடம் அரைமணி நேரத்துக்கும் மேலாக பேச்சுக்கொடுத்து வெளியே வரும்படி அழைத்தனர். ஆனாலும் ரஞ்சித்குமார் கதவை திறக்க வில்லை. இதனையடுத்து வீரர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ரஞ்சித்குமாரை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கதவை பூட்டிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த இன்ஜினியர் appeared first on Dinakaran.

Tags : Karur ,Ravichandran ,Periyakulam ,Theni district ,Ranjith Kumar ,
× RELATED குட்காவை பதுக்கி வைத்து விற்க முயன்றவர் மீது வழக்கு