×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை எகிறியது: 1 கிலோ மல்லி ரூ.3,000

சென்னை: பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.2,300, ஐஸ் மல்லி ரூ. 1,800, ஜாதிமல்லி ரூ.900, முல்லை ரூ.1200, கனகாம்பரம் ரூ.1000, காட்டுமல்லி ரூ.400, அரளி பூ ரூ.350, பன்னீர்ரோஸ் ரூ.140, சம்பங்கி ரூ.250, சாமந்தி ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.3,000, ஐஸ் மல்லி ரூ.2,400, ஜாதிமல்லி ரூ.2,500, முல்லை ரூ.1500, கனகாம்பரம் மற்றும் காட்டுமல்லி தலா ரூ.1,000, அரளி பூ ரூ.200, சாமந்தி ரூ.100, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.130, சாக்லேட் ரோஸ் ரூ.150க்கும் விற்கப்பட்டது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை எகிறியது: 1 கிலோ மல்லி ரூ.3,000 appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Chennai ,Pongal festival ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...