×

ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் ஆஜர்

புதுடெல்லி: சீனர்களுக்கு விசா பெற்று தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். பஞ்சாப் மாநிலம், தல்வாண்டி சபோ என்ற இடத்தில் மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. மின் உற்பத்தி மையத்தின் பணிகள் முடிக்க தாமதமானதால் அதில் பணியாற்றிய சீன ஊழியர்களின் விசா முடிவடைந்தது. சீன ஊழியர்கள் 263 பேருக்கு திட்ட விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் எம்பிக்கும் அவருடைய நெருங்கிய நண்பரான பாஸ்கரராமன் ஆகியோருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ ஏற்கனவே, வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான பாஸ்கரராமனை கைது செய்தனர்.சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்பியான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த மாதம் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி அவர் அமலாக்கத்துறை முன் ஆஜரானார். இதன் பின்னர் 2ம் தேதி மீண்டும் அந்த அலுவலகத்தில் ஆஜரானார். இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆஜரானார். ஒரு மாதத்திற்குள் அவர் 3 முறை அமலாக்க துறையில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Karti Chidambaram ,Enforcement Directorate ,New Delhi ,Enforcement Department ,Dalwandi Sabo, Punjab ,Karthi Chidambaram ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம்...