×

பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பி.சி. படிப்பு கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த திட்டம்: ஏ.ஐ.சி.டி.இ முடிவு

சென்னை: பி.பி.ஏ., பி.எம்.எஸ். மற்றும் பி.சி. படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்து இருக்கிறது.  தொழில்நுட்ப கல்வி மற்றும் அதோடு சார்ந்த படிப்புகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சட்டம் (ஏ.ஐ.சி.டி.இ.) வரையறுக்கிறது. தொழில்நுட்ப கல்வி என்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் இன்ஜினியரிங் தொழில்நுட்பம், கட்டிடக் கலை, நகர திட்டமிடல், மேலாண்மை, மருந்தகம் மற்றும் பயன்பாட்டு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த பிரிவுகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுகலை படிப்புகளை ஏ.ஐ.சி.டி.இ. ஒழுங்குபடுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வியாண்டு முதல் பி.பி.ஏ., பி.எம்.எஸ். மற்றும் பி.சி. படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் முடிவு செய்து இருக்கிறது. முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகியவற்றில் உள்ள ஒரே மாதிரியான கல்வித் தரத்தை பி.பி.ஏ., பி.எம்.எஸ்., பி.சி. படிப்புகளிலும் பராமரிக்க ஏ.ஐ.சி.டி.இ. திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மாநில பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டு உள்ளது.

The post பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பி.சி. படிப்பு கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த திட்டம்: ஏ.ஐ.சி.டி.இ முடிவு appeared first on Dinakaran.

Tags : AICTE ,Chennai ,B.P.A. ,B.M.S. ,B.C. ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...