×

இந்த ஆண்டில் 4 கிரகணங்கள் தோன்றும்: வானியல் அறிஞர்கள் தகவல்

சென்னை: ஒவ்வோர் ஆண்டும் 12 மாதங்களில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் ஏற்படும். இந்த 2024ம் ஆண்டில் 2 சந்திர கிரகணமும், 2 சூரிய கிரகணங்களும் ஏற்படும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கிரகணங்கள் முழுநிலவுடன் பிரிக்க முடியாத வகையில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன. சந்திரன் அதன் முழு சுற்றுக்கு வரும் போது சூரியனை கடந்து எதிர்திசையில் நகர்ந்து பூமிக்கு பின்னால் செல்கிறது. மற்றும் பூமியின் நிழலைக் கடந்து சந்திர கிரகணத்தை உருவாக்குகிறது.

சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மறைக்கப்படும் போது முழுமையான சந்திர கிரகணத்தை பார்க்கிறோம். மற்ற நேரங்களில் பூமியின் நிழலின் வழியாக சந்திரனின் பகுதி கிரகணம் ஏற்படுகிறது (பூமியின் நிழலின் வெளிப்புறப் பகுதி வழியாக சந்திரன் மட்டுமே செல்லும் போது). இதன்படி 2024ம் ஆண்டில் 2 சந்திர கிரகணங்களை சந்திக்க இருக்கிறோம். வரும் மார்ச் மாதம் 25ம் தேதியில் ஒரு கரு நிற (பெனும்பிரல்) சந்திர கிரகணத்தையும், செப்டம்பர் 17, 18ம் தேதிகளில் ஒரு பகுதி சந்திர கிரகணத்தையும் பார்க்கலாம்.

மார்ச் 25ம் தேதி ஏற்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம், பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்பில் சந்திரன் செல்லும் மிகச் சிறிய சந்திர கிரகணமாக இருக்கும். ஐரோப்பிய கணக்குப்படி வடக்கு மற்றும் கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவின் பெரும்பகுதியில் இருந்து இந்த கிரகணம் தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த கிரகணம் மொத்தம் 4 மணி 39 நிமிடங்கள் நீடிக்கும். செப்டம்பர் 17, 18ம் தேதியில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம் ஐரோப்பா ஆசிய, ஆப்ரிக்க, தென் அமெரிக்கா, பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் கடல் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் தெரியும்.

இது இரவு 8 மணிக்கு மேல் 10.44 மணிக்கு தொடங்கி இரவு 12.47 மணி வரை நீடிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முழு சூரிய கிரகணத்தையும், அக்டோபர் 2ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணத்தையும் காண முடியும். ஏப்ரல் 8ம் தேதி ஏற்படும் முழு சூரிய கிரகணத்தின்போது மெக்சிகோ, அமெரிக்கா, கனடாவில் இருட்டாக இருக்கும். இதுதவிர இந்த ஆண்டில் முழுநிலவு தோன்றும் நாட்கள் என்று பார்த்தால், ஜனவரி 25, பிப்ரவரி 24, மார்ச் 25, ஏப்ரல் 23, மே 23, ஜூன் 21, ஜூலை 21, ஆகஸ்ட் 19, செப்டம்பர் 17, அக்டோபர் 17, நவம்பர் 15, டிசம்பர் 15 ஆகிய நாட்களில் முழுநிலவுகளை பார்க்க முடியும். முழு நிலவு தோன்றும் போது பூமிக்கு மிக அருகில் இருப்பது போல முழுமையான பெரிய அளவில் இந்த நிலவு தோன்றும். அழகாகவும் இருக்கும்.

The post இந்த ஆண்டில் 4 கிரகணங்கள் தோன்றும்: வானியல் அறிஞர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...