×

காஞ்சி, செங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1.17 லட்சம் பேர் பயன்

செங்கல்பட்டு: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக சுமார் 1.17 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் செங்கல்பட்டில் 67 ஆம்புலன்ஸ் மற்றும் காஞ்சிபுரத்தில் 33 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் உயர் சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ், அடிப்படை வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி பைக் ஆம்புலன்ஸ் ஆகியவை அடங்கும். இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பிரசவ தேவைக்காக மொத்தம் 20,403 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 26,796 நபர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டில் 17,987 பேர், காஞ்சிபுரத்தில் 8,809 பேர் அடங்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,112 பேர், காஞ்சிபுரத்தில் 2,612 பேர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதயநோயாளிகள் பயனடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை மூலம் 956 பச்சிளம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.

இந்த 2 ஒருங்கிணைந்த மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 108 ஆம்புலன்சில் பிரசவத்துக்காக அழைத்து செல்லப்பட்ட ஒருசில கர்ப்பிணி பெண்கள் மூலம் 82 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் செங்கல்பட்டில் 62 குழந்தைகள், காஞ்சிபுரத்தில் 20 குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளன என குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 471 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று மாவட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post காஞ்சி, செங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1.17 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Senkai district ,Chengalpattu ,108 ambulance service ,Kanchipuram, Chengalpattu district ,Chengalpattu, Kanchipuram district ,emergency 108 ambulance service ,ambulance service ,Kanchi, Senkai district ,
× RELATED கருடன் கருணை