×

பூந்தமல்லி அருகே 2.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி வட்டம், கண்ணப்பாளையம் கிராமத்தில் சுமார் 30 சென்ட் நிலம் 8 கடைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பாக மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.ராஜ்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்துமாறு பூந்தமல்லி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் வட்டாட்சியர் மாலினி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கவிதா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டார்.

போல் மேல்பாக்கம் கிராமத்தில் ஆற்று வகைப்பாடு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 3 கடைகளை அகற்றி ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான நிலத்தினை மீட்டார். மேலும் கோளப்பஞ்சேரி கிராமத்தில் மயானம் வகைப்பாடு கொண்ட புறம்போக்கு நிலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான சுமார் 2 சென்ட் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து சாலமன் மற்றும் ராஜன் ஆகியோர் கறிக்கடை நடத்தி வருவதாக வந்த புகார்கள் வந்தன. அதன்பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முறையே 7 மற்றும் 6 நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் கையகபடுத்தப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றியதின் மூலம் ஆக மொத்தம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வருவாய் ஆய்வாளர் சிவசக்தி முருகன், வயலாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் கீதா லட்சுமி, கோலப்பஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் லதா, நீர்வள ஆதாரத்துறை அலுவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post பூந்தமல்லி அருகே 2.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Thiruvallur ,Poontamalli Circle ,Kannappalayam ,Th. Lord Shankar ,District Revenue Officer ,A. Rajkumar ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது