×

காமராஜர் உடன் யாரையும் ஒப்பீடு செய்யக்கூடாது.. உண்மையை மறைத்து தான்தோன்றிதனமா அண்ணாமலை பேசுகிறார்: அதிமுகவின் கே.பி.முனுசாமி கண்டனம்!!

சென்னை: பிரதமர் மோடியை காமராஜர் உடன் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கே.பி.முனுசாமி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

அண்ணாமலைக்கு அதிமுக கடும் கண்டனம்:
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தராமல் வஞ்சிக்கிறது. காமராஜர் உடன் யாரையும் ஒப்பீடு செய்யக்கூடாது. தற்போதுள்ள எந்த தலைவர்களையும் காமராஜர் உடன் ஒப்பிட்டு பேச முடியாது .

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு-மோடி வராதது ஏன்?
தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டை உ.பி., குஜராத் நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு மோடி வராதது ஏன்?. மேலும், ஒரே நாடு, ஒரே தேசம் என்றும் பேசும் பிரதமர், அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறாரா? என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் அவ்வாறு செயல்படும் பொது தமிழ்நாடு குறித்து விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

திராவிட ஆட்சியில் ஊழல் என்ற அண்ணாமலைக்கு கண்டனம்
திராவிட காட்சிகள் ஆட்சியில் இருந்தபோதுதான் ஊழல் மலிந்துவிட்டதாக அண்ணாமலை பேசியதற்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சிறந்த மாநிலம் என ஒன்றிய அரசே பல முறை பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிங்களுக்கு எல்லாம் சிறந்த விருது கொடுக்காமல் தமிழ்நாட்டுக்கு சிறந்தவிருது கொடுப்பது மூலமே இங்கு சிறப்பான ஆட்சி நடக்கிறது.

உண்மையை மறைத்து தான்தோன்றிதனமா அண்ணாமலை பேசுவது நாகரிகமான அரசியல் இல்லை. அரசியலுக்கு இப்போதுதான் அண்ணாமலை வந்திருக்கிறார் முன்னர் போலீசில் இருந்தார். போலீசார் எப்போதும் குற்றவாளிகளை பற்றி சிந்திப்பதால் அண்ணாமலை அப்படியே சிந்திக்கிறார். என்று அவர் கூறியுள்ளார்.

The post காமராஜர் உடன் யாரையும் ஒப்பீடு செய்யக்கூடாது.. உண்மையை மறைத்து தான்தோன்றிதனமா அண்ணாமலை பேசுகிறார்: அதிமுகவின் கே.பி.முனுசாமி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Atamugvin K. ,Chennai ,BJP ,President ,Annamale ,Deputy Secretary General ,K. B. Munusamy ,Annamala ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...