×

தஞ்சை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோருக்கு ஜன.24 வரை காவல்..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோருக்கு ஜனவரி 24ம் தேதி வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் வேலை பார்த்த நவீன், ஐஸ்வர்யாவுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இருவரின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக பெண்ணின் வீட்டார் தீவிர ஜாதி வெறி கொண்டிருந்துள்ளனர். பெண்ணின் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாகி குடும்பத்திற்கு தெரிந்துள்ளது. இதனால் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஐஸ்வர்யாவை வெளியே விடாமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா மர்மமாக இறந்துள்ளார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளனர். இதனிடையே, ஐஸ்வர்யாவை துன்புறுத்தி பெற்றோர் கொலை செய்ததாக காதலன் நவீன் புகார் அளித்திருந்தார். அதன்படி, காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த பெற்றோரை பட்டுக்கோட்டை காவல்துறை கைது செய்தது.

நெய்வவிடுதியைச் சேர்ந்த பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜா ஆகிய இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் தனது மகளை பெற்றோரே கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், வழக்கில் சின்ராசு, முருகேசன், செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கு ஜன.24 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

The post தஞ்சை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோருக்கு ஜன.24 வரை காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Danjai ,Thanjai ,Oratanadu ,Tanji district ,Naveen ,Tiruppur ,Aishwarya ,
× RELATED ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இருபாலர் பள்ளியாக மாறியது