×

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பிரதமர் மோடி 11 நாட்கள் சிறப்பு பூஜை.. மக்களின் ஆசியைக் கோருவதாக செய்தி வெளியிடு!!

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தான் இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த செய்தியில், இந்தத் தருணத்தை எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம் என்று அழைத்த பிரதமர், “நான் உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கிறேன்! நான் ஒரு வித்தியாசமான பக்தி உணர்வை அனுபவிக்கிறேன்.நான் விரும்பினாலும், அதன் ஆழத்தையும், அகலத்தையும், தீவிரத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என் நிலைமையை நீங்களும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

இந்த வாய்ப்பிற்கு பிரதமர் மோடி தமது நன்றியைத் தெரிவித்துள்ளர். “பல தலைமுறைகள் பல ஆண்டுகளாக ஒரு தீர்மானம் போல தங்கள் இதயங்களில் வாழ்ந்த கனவை நிறைவேற்றும் நேரத்தில் நான் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் என்னை உருவாக்கியுள்ளார். இது மிகப் பெரிய பொறுப்பு” என்றார்.

இந்த முயற்சிக்கு மக்கள், முனிவர்கள் மற்றும் கடவுளின் ஆசீர்வாதங்களைக் கோரிய பிரதமர், ராமர் கணிசமான நேரத்தைச் செலவிட்ட நாசிக் தாம் – பஞ்சவடியில் இருந்து இந்த பூஜைகளை தொடங்குவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சுவாமி விவேகானந்தர் மற்றும் மாதா ஜிஜாபாய் ஆகியோரின் பிறந்த நாளான இன்று மகிழ்ச்சியான இந்தத் தற்செயல் நிகழ்வைப் பற்றி குறிப்பிட்ட அவர், தேச உணர்வின் இரு ஜாம்பவான்களுக்கும் தமது மரியாதையைச் செலுத்தினார். சீதா-ராமர் மீது எப்போதும் பக்தி கொண்ட தமது சொந்தத் தாயை இந்தத் தருணத்தில் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

நாட்டு மக்கள் தம்முடன் இணைந்து வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மக்களின் ஆசிர்வாதத்தையும், தங்கள் உணர்வுகளைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். கடவுள் ‘உருவமற்றவர்’ என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கடவுள், உடல் வடிவில் கூட, நமது ஆன்மீகப் பயணத்தை வலுப்படுத்துகிறார். மக்களிடம் கடவுளின் ஒரு வடிவம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். ஆனால் எனக்குக் கடவுளைப் போன்ற மக்கள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி ஆசீர்வாதம் செய்யும்போது, எனக்குள் புதிய சக்தி புகுத்தப்படுகிறது. இன்று, உங்கள் ஆசீர்வாதம் எனக்குத் தேவை”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

The post ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பிரதமர் மோடி 11 நாட்கள் சிறப்பு பூஜை.. மக்களின் ஆசியைக் கோருவதாக செய்தி வெளியிடு!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Ramar Temple ,Kumbabhishek ,Asia ,NEW DELHI ,NARENDRA MODI ,AYODHI RAMAR TEMPLE ,Ramar Temple Kumbabishekha ,
× RELATED சொல்லிட்டாங்க…