×

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி.. ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் திடீர் தாக்குதலால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிர்ச்சி!!

ஏமன்: செங்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் சர்வதேச அளவில் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைகளுக்கும் இடையில் போர் வெடித்தது. இருதரப்பிற்கும் ஆதரவாக பல்வேறு நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன.

அந்த வகையில் ஹமாஸ் அமைந்துள்ள பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படைகள் ஆதரவு தெரிவித்தது. மூன்று மாதங்களாக சண்டை தொடர்ந்து வரும் நிலையில் இருதரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. இத்தகைய சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படைகள் குறிவைத்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதனால் அமெரிக்க ராணுவத்தின் போர் கப்பல்கள் செங்கடலில் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தின. இந்நிலையில் இன்று காலை ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சி படைகளின் முகாம்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன. ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தினர். அல் ஷதைதா, சத்தா, தாமர், சனா ஆகிய நகரங்களின் மீது 10 நாடுகளின் கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இருநாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி.. ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் திடீர் தாக்குதலால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Red Sea ,Houthi ,United States ,England ,Yemen ,US ,Israel ,Hamas ,United ,States ,Dinakaran ,
× RELATED இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்