×

அனுமன் ஜெயந்தி கோலாகலம்

கரூர், டிச. 12: ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மூல நட்சத்திரத்தில் வரும் அமாவாசை, அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கரூரின் பக்கத்து மாவட்டமான நாமக்கல்லில் உள்ள அனுமனுக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலைகள் சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது. இதனை, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு போன்ற அருகாமையில் உள்ள மாவட்ட மக்கள் நேற்று நாமக்கல் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, கரூர் மாநகர பகுதிகளில் உள்ள வெண்ணைமலை ஆஞ்சநேயர் கோயில், பசுபதி ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில், பசுபதி ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு, லட்சார்ச்சனை பூஜைகளும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அலங்காரங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், நு£ற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அனுமன் ஜெயந்தி கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Hanuman Jayanti Kolakalam ,Karur ,Hanuman Jayanti ,Moola Nakshatra ,Hanuman ,Namakkal ,Salem ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...