×

₹29 லட்சத்தில் தம்பித்துரை பூங்கா சீரமைப்பு

நாகப்பட்டினம்,ஜன.12: நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பழமை வாய்ந்த தம்பிதுரை பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சீரமைக்கு கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹29 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா புதுப்பிக்கும் பணி நடந்தது. இந்த நிதியில் இருந்து நடைபாதை, வண்ண மின்விளக்குகள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதிகள், மணிகூண்டில் வர்ண மின்விளக்குகள், மற்றும் கோபுர கடிகாரம் பொருத்தப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றநிலையில் பூங்கா திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிகழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் ஆகியோர் பூங்காவை திறந்து வைத்தனர். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் திலகர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) பாஸ்கர், நகராட்சி பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ₹29 லட்சத்தில் தம்பித்துரை பூங்கா சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thambiturai Park ,Nagapattinam ,Nagapattinam Prapalayam ,Thambidurai Park ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...