×

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

 

திருச்சி, ஜன.12: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. அதில் ஒரு தற்கொலை சம்பவத்திற்கு, குறைந்தபட்சம் 20 தற்கொலை முயற்சி தோல்வி சம்பவங்களும் இருக்கின்றன.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வு அல்ல என்பதை வலியுறுத்தி தொடர்ந்து பல விழிப்புணர்வு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது. அதிலும் மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் குறைந்த எதிர்பார்த்த மதிப்பெண் வராமல் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது, கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்.

எனவே தற்கொலையை தடுப்பது என்பது மிகவும் கட்டாயமானதாக கருதப்படுகிறது. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்தால் அவர்களுக்கு முதலில் மனநல ஆலோசனை என்பது அவசியம். எனவே தான் திருச்சியில் உள்ள மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், மனநல ஆலோசகர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி உள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி துவங்கி கரூர் பைபாஸ் சாலை, சிந்தாமணி அண்ணாசிலை வழியாக இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் எதிர்கால சமுதாயமான மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்த்து தற்கொலையை தடுக்கும் வாசகங்களை முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

The post தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Suicide Prevention Awareness Rally ,Trichy ,Trichy Satram ,station ,World Health Organization ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்