×

குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள்

 

நத்தம், ஜன. 12: நத்தம் அருகே ஊராளிபட்டியைச் சேர்ந்தவர் கணேசன். அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று, பதுங்கியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையிலான வீரர்கள், வீட்டில் பதுங்கி இருந்த 4 அடி நீள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதேபோன்று, விளாம்பட்டியில் பாபு என்பவரது தோட்டத்திற்குள் மலைப்பாம்பு புகுந்தது.

இது குறித்து அவர், நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், அங்கிருந்த 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்புகளை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். வத்தலக்குண்டு தெற்குத்தெருவை சேர்ந்தவர் முருகனது வீட்டின் முன்பிருந்த பழைய பொருட்களை அப்புறப்படுத்தும்போது, அதில் பதுங்கியிருந்த சுமார் 8 அடிநீள சாரைப் பாம்பு அங்கிருந்து தப்பியோடியது.

பின்னர் அருகில் உள்ள மறைவில் பதுங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ஜோசப், போக்குவரத்து அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், மறைவில் பதுங்கியிருந்த பாம்பை அரை மணி நேர போராட்டத்துக்கு பின் பிடித்தனர். பின்னர் வனத்துறை மூலம் அருகில் உள்ள வனப்பகுதியில் பாம்பு விடுவிக்கப்பட்டது.

The post குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் appeared first on Dinakaran.

Tags : Natham ,Ganesan ,Uralipatti ,Nutham ,Dinakaran ,
× RELATED நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு