×

நெற்பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் ‘ஈ’ வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.12: வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ராம்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி ஆகியோர் தும்படைக்காகோட்டை, இருதயபுரம் பகுதியில் நெல் வயல்களை ஆய்வு செய்தனர். இப்பூச்சி தாக்கப்பட்ட நெற்பயிரின் இலைகள் நீண்ட குழல் போல மாறி வெங்காய இலை போன்று காட்சியளிக்கும். இக்குழல் வெள்ளி குருத்து யானை தந்தம் போல் வெண்மையாக இருப்பதால் ஆனைக் கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது.

இப்பூச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கார்போசல்பான் 25% இசி 400மி.லி அல்லது தயாமீத்தாக்சம் 25% டபிள்யூ ஜி 40 கிராம் அல்லது பிப்ரோனில் 5% எஸ்சி 400 மி.லி இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீர் மற்றும் 200 மில்லி லிட்டர் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். எனவே விவசாயிகள் இப்பூச்சியை கட்டுப்படுத்தி அதிகமாக மகசூல் பெற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலெட்சுமி விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

The post நெற்பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் ‘ஈ’ வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : RS ,Mangalam ,Dr. ,Ramkumar ,Agricultural Science Station ,Agriculture ,Nagarajan ,Regional ,Rajalakshmi ,Tumpadaikkakot, Kariyapuram ,
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்