×

அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்

 

ராமநாதபுரம், ஜன.12: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் பால ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சமஸ்தானம், தேவஸ்தானம் சார்பில் பால், வெண்ணை, இளநீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, 1008 வடைகள் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவசத்தில் பால ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.

திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை ஜெயபந்த ஆஞ்சநேயருக்கு 11 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, படையல்கள் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் சேதுக்கரைக்கு புனித நீராடுதல், முன்னோருக்கு அமாவாசை திதி, தர்ப்பணம் கொடுக்க வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாயல்குடி ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமிக்கு 11 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு 1008 வடை, 1008லட்டு ரூபாய் நோட்டு, வெற்றிலை மாலை உள்ளிட்ட புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவில் கூட்டு பிரார்த்தனை மற்றும் பஜனைகள் நடந்தது. இதுபோன்று கடலாடி பத்திரகாளியம்மன் கோயிலுள்ள வீரஆஞ்சநேயர், கண்ணன்கோயில் ஆஞ்சநேயர், மீனங்குடி கல்லடிபெருமாள் ஆஞ்சநேயர், முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி ஆஞ்சநேயர், முனியன்கோயில் அதிவீர ஆஞ்சநேயர், ஆப்பனூர் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுபோன்று திருப்புல்லானி, தேவிப்பட்டினம், ஆதங்கொத்தங்குடி உள்ளிட்ட பெருமாள் கோயில், கண்ணன் கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் கூடிய தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொண்டி அருகே உள்ள ஒரியூரில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பால் பன்னீர் தேன் இளநீர் திருமச்சனபொடி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகங்கள் முடிந்த பின் ஆஞ்சநேயருக்கு 108 வட மாலை அணிவித்து சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

The post அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Hanuman Jayanti Celebration ,Ramanathapuram ,Hanuman Jayanti ,Ramanathapuram district ,Ganapati Homam ,Ramanathapuram Bala Anjaneyar Temple ,Samasthan ,Anjaneya ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...