×

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட 2 பிரிவினைவாத அமைப்பின் சொத்துக்கள், பணம் பறிமுதல்

புதுடெல்லி: காஷ்மீரில் மறைந்த பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியால் தொடங்கப்பட்ட தெஹ்ரீக்-இ-ஹுரியத் மற்றும் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் தலைமையிலான முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் ஆகிய 2 அமைப்புகளுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்து கடந்த டிசம்பர் 31ல் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து, உபா சட்டத்தின் பிரிவு 42ல் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட 2 அமைப்புகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கி கணக்குகள், நிதி தொடர்பான விஷயங்களை முடக்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post காஷ்மீரில் தடை செய்யப்பட்ட 2 பிரிவினைவாத அமைப்பின் சொத்துக்கள், பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,New Delhi ,Union Home Ministry ,Tehreek ,e-Huriyat ,Syed Ali Shah Gilani ,Muslim League Jammu Kashmir ,Masarat Alam ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!