×

கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம்

புதுடெல்லி: ராணுவ தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ‘இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, பதற்றம் நிறைந்த பல்வேறு பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டாலும், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதி நிலையாக காணப்பட்டாலும் அங்கு பதற்றம் நீடிக்கிறது,’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசிய போது, ‘’மியான்மரில் உள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி படையினர் இந்திய ராணுவத்துடன் சண்டையிடுகின்றனரா என்பதை அறிந்து கொள்ள மியான்மர் ராணுவ வீரர்கள் 416 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளனர். இதனால் அப்பகுதி கூடுதல் உன்னிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தோ-மியான்மர் எல்லை விவகாரம் சற்று கவலை அளிப்பதாக உள்ளது,’’ என கூறினார்.

The post கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : eastern Ladakh border ,New Delhi ,Army Day ,Army ,Manoj Pandey ,India ,China ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு