×

பவானி நகராட்சியில் 10,200 குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு

பவானி, ஜன. 12: பவானி நகராட்சி பகுதியில் வசிக்கும் 10,200 குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு, பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன், நகர்மன்றத் துணைத் தலைவர் மணி முன்னிலை வகித்தனர். நகரப் பகுதியில் உள்ள 11 நியாய விலைக் கடைகள் மற்றும் 2 நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படுகிறது. திமுக அவைத்தலைவர் மாணிக்கராஜன், மாவட்ட பிரதிநிதி நல்லசிவம், கவுன்சிலர்கள் பாரதிராஜா, ரவி, சுமதி, திலகவதி, நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பவானி நகராட்சியில் 10,200 குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Bhawani municipality ,Bhavani ,Bhavani municipality ,Tamil Nadu government ,Bhavani Municipal ,Council ,Sinthuri Ilangovan ,City DMK ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்