×

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம், ஜன.12: அனுமன் ஜெயந்தி விழாயொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், காஞ்சிபுரம் தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பின்பிறமுள்ள 18 அடி உயர பிரசன்ன ஆஞ்சநேயர்,  சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அருகில் உள்ள வீர ஆஞ்சநேயர், ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் கோயில் உள்ள ஆஞ்சநேயர், உத்திரமேரூர் அடுத்த மருதத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு வீர ஆஞ்சநேயர், செங்கல்பட்டு அடுத்த தேவனூர் ஆஞ்சநேயர் கோயில், திருப்போரூர் அருகே உள்ள புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோயில், நெய்குப்பி ஆஞ்சநேயர், பெருமாள்ச்சேரி பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தியும், வெற்றிலை மாலை, நெய் அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

The post அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Anjaneya ,Hanuman Jayanti ,Kanchipuram ,Kanchipuram district ,Swami ,Panchamuga Anjaneya Temple ,Kanchipuram Puduppakkam ,Kanchipuram Theradi ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை