×

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி வழக்கில் ஆதாரங்களை குற்றவாளிக்கு தர அமெரிக்கா எதிர்ப்பு

நியூயார்க்: அமெரிக்க குடியுரிமை பெற்ற சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை நியூயார்க்கில் கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து இந்தியரான நிகில் குப்தா என்பவர் முயன்றதாக அமெரிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். கடந்த ஜூன் மாதம் செக் குடியரசின் ப்ராக் நகரில் நிகில் குப்தாவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செக் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ள நிகில் குப்தாவை அங்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நிகில் குப்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க கோரி அவரது வழக்கறிஞர் நியூயார்க் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடந்த 8ம் தேதி இதை விசாரித்த நீதிபதி இதில், 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான அரசின் பெடரல் வழக்கறிஞர்கள், குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,நிகில் குப்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது,மட்டுமே தகவல்களை வழங்குவதாக தெரிவித்தனர்.

The post சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி வழக்கில் ஆதாரங்களை குற்றவாளிக்கு தர அமெரிக்கா எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : US ,New York ,Nikhil Gupta ,Gurpadwant Singh ,Prague, Czech Republic ,America ,
× RELATED 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி