×

ஜன.18 முதல் 31ம் தேதி வரை: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து ஆவணங்களை பதிவு செய்தல், நிறுவனங்கள், திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைவழங்கப்படுகிறது. ஆவணப்பதிவுக்காக சாதாரண நாட்களில் 100 முன்பதிவு டோக்கன்களும், 12 தட்கல் டோக்கன்களும் வழங்கப்படும். கூர்த் , விசேஷ நாட்களில் அதிகளவில் ஆவணபதிவு நடப்பதால் அந்த நாட்களில் கூடுதலாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு டிச.14ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் மார்கழி மாதம் தொடங்கியதால்முகூர்த்த தினங்கள் ஏதும் வரவில்லை. தை விசேஷமாக கருதப்படுவதால் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும்.

இதன் காரணமாக பொங்கலை (ஜன.15ம் தேதி) ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான ஜன.18ம் தேதி முதல் 31ம் தேதி வரை வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

The post ஜன.18 முதல் 31ம் தேதி வரை: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…