×

வரும் 15ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதியுடன் விடைபெறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமான புயல்கள் வரிசையாக வராமல் வெறும் காற்றழுத்தங்கள் மட்டுமே மழையை கொடுத்துக் கொண்டு இருந்தன. இதற்கிடையே மிக்ஜாம் புயல் வந்து எதிர்பாராத அளவுக்கு மழையைக் கொடுத்தது. அதை தொடர்ந்து தென் தமிழகத்தில் காற்று சுழற்சிகள் பெரு மழையைக் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், ஜனவரி மாதம் சில நாட்கள் மழை பெய்த நிலையில், தற்போது படிப்படியாக மழை குறையத்தொடங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருச்சி, மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவையில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்ப நிலை நேற்று இருந்தது. நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி வரையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென் இந்தியப் பகுதிகளில் இருந்து 15ம் தேதி நிறைவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், தற்போது கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post வரும் 15ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது: வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Northeast ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Northeast Monsoon ,Tamil Nadu ,North East Monsoon ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக...