×

இந்தியாவுடனான மோதலுக்கு இடையே சீனாவுடன் கைக்குலுக்கும் மாலத்தீவு: 20 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து


பீஜிங்: இந்தியாவுடனான மோதலுக்கு இடையே மாலத்தீவு, சீனா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து வௌியிட்டதால் இந்தியா, மாலத்தீவு இடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாலத்தீவு பயணத்துக்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்து வருகின்றனர். இதனிடையே மோடி குறித்த சர்ச்சை கருத்து வௌியிட்ட அமைச்சர்கள் 3 பேரை சீனா ஆதரவாளராக கருதப்படும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சூ தற்காலிக பதவி நீக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் முகமது முய்சூ 5 நாள் சுற்றுபயணமாக கடந்த 8ம் தேதி சீனாவுக்கு சென்றுள்ளார். அங்கு பீஜிங் மாகாணத்தில் நடந்த மாலத்தீவு வர்த்தக தொழில் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முய்சூ, சீன நாட்டினர் அதிகளவில் மாலத்தீவுக்கு சுற்றுலா வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பிரதமர் லீ கியாங்கை சந்தித்து பேசிய முய்சூ, சீன அதிபர் ஜீ ஜின் பிங்கையும் அதிபர் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது சீனாவிலிருந்து மாலத்தீவுக்கு நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது, விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு அதிபர்களும் விவாதித்தனர். தொடர்ந்து பேரிடர் மேலாண்மை, வர்த்தக வழித்தடம், மின்வணிகம், சுற்றுலா துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட 20 முக்கிய ஒப்பந்தங்களில் இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டனர்.

The post இந்தியாவுடனான மோதலுக்கு இடையே சீனாவுடன் கைக்குலுக்கும் மாலத்தீவு: 20 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Maldives ,China ,India ,BEIJING ,Modi ,Lakshadweep ,Dinakaran ,
× RELATED மாலத்தீவு அதிபர் மீண்டும் அமோக வெற்றி