×

அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு ஒத்தி வைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி எம்எல்ஏ. அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் முறைகேடு மூலம் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது புகார் எழுந்து வந்தது.

இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். வழக்கில் விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுக்கு எதிராக கடந்த மே 22ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் 210 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு புதுக்ேகாட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று(11ம் தேதி) விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, வழக்கை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,C. Vijayabaskar ,Pudukottai ,Former ,minister ,C.Vijayabaskar ,Ilupur Saurashtra Street ,Pudukottai district ,MLA ,Viralimalai Constituency ,
× RELATED அவதூறு வழக்கு; சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்!