×

முதலீட்டாளர் மாநாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி காட்டியுள்ளார்: பொன்குமார் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் 2006-2011 காலகட்டத்தில் அன்றைய முதல்வர் கலைஞருடைய கடும் முயற்சியால் 56 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

அதன் பின் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த 10 கால அதிமுக அரசு தன்னுடைய நிர்வாக திறமையின்மையால் புதிய தொழிற்சாலைகளை தொடங்காதது மட்டுமல்ல ஏற்கனவே செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தன. இதனால் தொழில் துறையில், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தொழில்துறையில் தனி கவனம் எடுத்து செயல்பட்டு வந்தார். ‘முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. பல நாடுகளுக்கு தானே நேரில் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்தார். அதனுடைய உச்சமாக தற்போது சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடத்தி, உலகம் திரும்பிப் பார்க்கும் வண்ணம், இந்தியா வியக்கும் வகையில் சுமார் 7 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து சாதனைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடையும். திமுக ஆட்சி காலத்தில் இப்படிப்பட்ட தொழில்துறையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிய தொழிற்சாலைகள் பெருகி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே இப்படி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு வளர்த்தெடுக்க ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாடு முதல்வரை பாராட்டி வாழ்த்துகிறோம்.

The post முதலீட்டாளர் மாநாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி காட்டியுள்ளார்: பொன்குமார் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,President ,DMK ,Karshyam ,Stalin ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...