×

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட எந்த நோய் பரவலும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட எந்த நோய் பரவலும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை தொகுதி இளைஞர்களுக்கு சுய தொழில் துவங்கிடும் வகையில் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலையில் நடைபெற்றது.

இதில் 150 நபர்களுக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோவை அமைச்சர் வழங்கினார்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் எந்த சிகிச்சை வழங்கினாலும் அது தவறான சிகிச்சை என்று கருத்தை சித்தரிப்பதற்காக பலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எந்த மருத்துவரும் தவறான சிகிச்சை வழங்க வரவில்லை. அதுவும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். பொதுமக்கள் சிலர் முழு விவரம் தெரியாமல் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

டெங்கு உள்ளிட்ட அனைத்து மழைக்கால நோய்களும் கட்டுக்குள் உள்ளது. குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் பெரிய அளவில் தொற்று பாதிப்பு இல்லை. எனவே எந்த நோய் பரவலும் தமிழகத்தில் தற்போது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட எந்த நோய் பரவலும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Saidappet ,Nadu ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...