×

சூறைக்காற்று வீசுவதால் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுகிறது. இந்த நிலையில், சூறைக்காற்று வீசுவதுடன் கடல் அலை கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், தூத்துக்குடியில் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனால், தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு கரையில் வரிசை கட்டி நிற்கிறது. இதனிடேயே, நாளை குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

The post சூறைக்காற்று வீசுவதால் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை appeared first on Dinakaran.

Tags : Fisheries ,Thoothukudi ,Fishery ,Kerala ,Indian Ocean ,equator ,Sri Lanka ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்