×

முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள துணைவேந்தர் ஜெகநாதன் ஆளுநர் ரவியை வரவேற்றார்!

சேலம்: முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள துணைவேந்தர் ஜெகநாதன் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ரவிக்கு துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி/எஸ்டி பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில், மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பழகலைக் கழக வேந்தர் ஜெகநாதனை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் சென்றார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குற்றவாளிக்கு துணைபோகும் ஆளுநரின் செயல்பாடு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளார். கைதான ஒருவர் பதவியில் நீடிக்கக் கூடாது என செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஆளுநர். அந்த விவகாரத்தில், இல்லாத அதிகாரத்தை பயன்படுத்திய ஆளுநர், துணைவேந்தரை நீக்க மறுப்பது ஏன் என போராட்டக் காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆளுநர் ஆர்.என். ரவியை வரவேற்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்துள்ளார். முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமினில் உள்ள நிலையில், இன்று பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றார்.

 

The post முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள துணைவேந்தர் ஜெகநாதன் ஆளுநர் ரவியை வரவேற்றார்! appeared first on Dinakaran.

Tags : Deputy Minister ,Jehanathan ,Governor ,Ravi ,Salem ,Governor R. N. ,Periyar University ,Salem Periyar University ,SC/SD ,Governor Ravi ,
× RELATED டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள்...