×

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480 விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

செவ்வாய் கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480 விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!