×

அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது : என்.சி.டி.இ

சென்னை : அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று என்.சி.டி.இ தெரிவித்துள்ளது. 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவித்துள்ளது. சிறப்பு கல்வி உட்பட 2023-24 கல்வியாண்டில் இருந்து பி.எட். 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை-2020-ன்படி, தேசிய ஆசிரியர் கவுன்சிலில் புதிய பயிற்சி திட்டம் அமல்படுத்தும் முயற்சி நடக்கிறது. 4 ஆண்டு பி.எட். படிப்பை நடத்த விரும்பும் கல்லூரிகள், பல்கலை.கள் போர்ட்டல் திறக்கப்பட்டதும் விண்ணப்பிக்கலாம்.

The post அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது : என்.சி.டி.இ appeared first on Dinakaran.

Tags : NCTE ,Chennai ,B.Ed ,National Council of Teachers ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...