×

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி

மதுராந்தகம், ஜன.11: மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணன் மகன் பிரவீன்குமார் (29). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கூரை வீட்டில் வசித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, 2 நாள் பெய்த மழையின் காரணமாக, கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த பிரவீன்குமாரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Chinnakannan ,Praveen Kumar ,Arungunam ,
× RELATED வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை