×

தொழில் உரிமம் பெற்ற பின்னரே கடைகள் செயல்பட வேண்டும்

ஓசூர், ஜன.11: ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி தொழில் உரிமம் பெற்ற பின்னரே அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆணையாளர் சினேகா கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை அனைத்தும், மாநகராட்சி தொழில் உரிமம் பெற்ற பின்னரே செயல்பட வேண்டும். தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023, பிரிவு 304கீழ் கடைகள், நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தொழில் உரிமம் பெற விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், மாநகராட்சியில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மாநகராட்சியில், தேர்தல் பிரிவு அறையில் உள்ள உதவி மையத்தில் பதிவேற்ற கட்டணமின்றி விண்ணப்பித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தொழில் உரிமம் பெற்ற பின்னரே கடைகள் செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Corporation ,Sneha ,Dinakaran ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது