×

கோழிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

அரூர், ஜன.11: மொரப்பூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(37). இவர் மொரப்பூர்- கல்லாவி சாலையில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு, மறுநாள் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ₹7 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சக்திவேல், மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோழிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Aroor ,Sakthivel ,Elavadai village ,Morapur ,Morapur-Kallavi road ,Dinakaran ,
× RELATED 517 பள்ளிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் விநியோகம்