×

ஈக்வடார் நாட்டில் அவசர நிலை பிரகடனம் டிவி அலுவலகத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டல்

ஈக்வடார்: பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில் செயல்பட்டு வரும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் துப்பாக்கி ஏந்திய முகமூடி கும்பல் ஒன்று புகுந்தது. அந்த நிறுவனத்தின் உள்ள பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் நேரடி ஒளிப்பரப்பு நடந்து கொண்டிருந்தது. தொலைகாட்சி நிறுவனத்திற்குள் புகுந்த கும்பல், துப்பாக்கி முனையில் பணியாளர்களை மிரட்டியது. அவர்களில் சிலர் அந்த கும்பலிடம் மோத முயன்ற போது, அவர்களை அந்த கும்பல் தாக்கியது. சிலரை கீழே தள்ளிவிட்டு இழுத்து சென்றனர். இதனால் பணியாளர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவியது.

தகவலறிந்து வந்த போலீசார் தொலைக்காட்சி நிலையத்துக்குள் அதிரடியாக ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்த அனைவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் பத்திரமாக மீட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன் குயாகுவிலில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து தாதா கும்பல் தலைவன் அடோல்போ ஃபிட்டோ மசியாஸ் என்பவன் தப்பினான். அவனுடன் தப்பிய கும்பல்தான் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஈக்வடார் நாட்டில் அடுத்த 60 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். மேலும், ஆயுதம் தாங்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

The post ஈக்வடார் நாட்டில் அவசர நிலை பிரகடனம் டிவி அலுவலகத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Ecuador ,Guayaquil ,Pacific Ocean ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த...