×

ஒன்றிய அமைச்சர் விடுதலை: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் டிகுனியாவில், பிரபாத் குப்தா என்பவர் கடந்த 2000ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் அஜய் மிஸ்ராவை விசாரணை நீதிமன்றம் 2004ம் ஆண்டு விடுவித்தது. இதனை எதிர்த்து அம்மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா திரிவேதி, பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபலின் வாதங்களை கேட்ட பின், விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.

The post ஒன்றிய அமைச்சர் விடுதலை: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Court ,New Delhi ,Prabhat Gupta ,Digunia ,Lakhimpur Kheri district ,Uttar Pradesh ,Ajay Mishra ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...