×

சில்லி பாய்ன்ட்…

* மலேசியா ஓபன் பிரணாய் அதிர்ச்சி
கோலாலம்பூரில் நடைபெறும் மலேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 14-21, 11-21 என நேர் செட்களில் டென்மார்க் வீரர் ஆண்ட்ரூஸ் அன்டன்சென்னிடம் அதிர்ச்சி தோவியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 21-18, 21-19 என நேர் செட்களில் இந்தோனேசியாவின் முகமது ஷோபிபுல் ஃபிக்ரி – பகாஸ் மவுலானா ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

* ‘குயிக் கன்ஸ்’ முதலிடம்
அல்டிமேட் கோகோ போட்டியின் 2வது தொடர் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. சென்னை குயிக் கன்ஸ் 10 ஆட்டங்களில் 7 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 25 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. தலா 6 வெற்றிகளை பெற்ற ஒடிஷா, குஜராத், தெலுங்கு யோதாஸ் முறையே 23, 21, 18 புள்ளிகளுடன் அடுத்த 3 இடங்களை பிடித்தன. 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ஒடிஷா – குஜராத், 2வது அரையிறுதியில் சென்னை – தெலுங்கு யோதாஸ் மோதுகின்றன.

* காலிறுதியில் ஆஸ்டபென்கோ
ஆஸ்திரேலியாவில் நடக்கும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவுடன் (30 வயது, 20வது ரேங்க்) மோதிய லாத்வியா நட்சத்திரம் யெலனா ஆஸ்டபென்கோ (26 வயது, 12வது ரேங்க்) 6-4, 5-7, 6-4 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியுக் (21 வயது, 35வது ரேங்க்) உடன் ஆஸ்டபென்கோ மோத உள்ளார். மகளிர் இரட்டையர் காலிறுதியில் கிச்னோக் (உக்ரைன்) – ஆஸ்டபென்கோ இணையுடன் மோதுவதாக இருந்த சாஸ்னோவிச் (பெலாரஸ்) – சினியகோவா (செக் குடியரசு) இணை காயம் காரணமாக வெளியேறியதால், ஆஸ்டபென்கோ இணை அரையிறுதிக்குள் நுழைந்தது.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Malaysia Open ,Pranai ,Malaysia Open Badminton Series ,Kuala Lumpur ,HS Pranai ,Andrews Antonsen ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிடாம்பி, பிரணாய் அதிர்ச்சி தோல்வி