×

‘ஒருநாள்’ கேப்டன் ஸ்மித்

ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் மற்றும் தலா 3 ஒருநாள், டி20ல் விளையாட உள்ளது. ஒருநாள் தொடரில் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக செயல்படுவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் பிப். 2, 4, 6 தேதிகளில் நடைபெறும். வார்னர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இனி டெஸ்ட் தொடக்க வீரராக ஸ்மித் களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. டெஸ்ட் அணி: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்மித், கவாஜா, ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ்,ரென்ஷா, ஸ்டார்க்.

The post ‘ஒருநாள்’ கேப்டன் ஸ்மித் appeared first on Dinakaran.

Tags : Captain Smith ,West Indies ,Australia ,Cricket Australia ,Cummins ,Hazelwood ,Starc ,Mitchell Marsh ,Steven ,Dinakaran ,
× RELATED இன்று முதல் இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்...