×

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பதவியேற்கவுள்ளார். அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் நியமனம் செய்துள்ளனர். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தனது ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : PS Raman ,Tamil Nadu Government ,Chennai ,PS ,Raman ,Chief Advocate ,Tamil ,Nadu ,Chief Public Prosecutor ,Shanmugasundaram ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...