×

பண்ருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் புறவழிச் சாலை பணிகள் தீவிரம்

 


கடலூர்: கும்பகோணம்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக பண்ருட்டி, காடம்புலியூர், கண்டகோட்டை பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் பயன்பாடு இருந்து வரும் நிலையில் தொடர் கோரிக்கையை தொடர்ந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். இத்திட்டம் 3 பிரதான பகுதிகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் போக்குவரத்து மற்றும் பயன்பாட்டின் தன்மை இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகள் முடிக்கப்படாமல் காலம் கடந்து வந்த நிலையில் துரிதப்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் பகுதி மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது கண்டரகோட்டை முதல் கடாம்புலியூர் வரை 23 கிலோமீட்டர் நெடுஞ்சாலை திட்டத்தின் பகுதி பிரதானமாக பொதுமக்களின் நலன் கருதி பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கேற்ற வகையில் சாலை அமைப்பு மற்றும் நெடுஞ்சாலை திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை தரப்பினர் தெரிவித்தனர். இதில் பிரதானமாக ஏழு கிலோமீட்டர் தூரம் பண்ருட்டி புறவழிச் சாலை அமைந்துள்ளது. அதிக அளவில் வாகனங்கள் பயன்பாடு மற்றும் நகர கிராமப்புறங்கள் அமைந்துள்ள இவ்வழிதடத்தில் சாலை பணிகளை துரிதப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை ஆறு மாத காலத்திற்குள் முழுமை அடையும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

The post பண்ருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் புறவழிச் சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Panruti ,Cuddalore ,Kumbakonam-Vikravandi National Highway Project ,Kadampuliyur ,Kandakottai ,Panrutti ,Dinakaran ,
× RELATED 17 வயது சிறுமியுடன் காதல் 19 வயது சிறுவன் மீது வழக்கு