×

விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் குஜராத்தில் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்கா அமைக்கப்படும்: அதானி அறிவிப்பு

குஜராத்: விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் குஜராத்தில் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்கா அமைக்கப்படும் என்று தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்திருக்கிறார். குஜராத் தலைநகர் காந்தி நகரில் சர்வதேச வர்த்தக மாநாடு தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். 34 நாட்டு அரசுகள் பங்குதாரர் நாடுகளாக உள்ள நிலையில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் பேசிய தொழிலதிபர் கவுதம் அதானி; தங்கள் நிறுவனம் குஜராத்தில் மேலும் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும், தங்கள் அமைக்க உள்ள பசுமை எரிசக்தி பூங்காக்கள் விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியும் என்றும் தெரிவித்தார். இந்த ஆலைகள் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய இரும்பு ஆலையை 2029ம் ஆண்டிற்குள் குஜராத்தில் அமைக்க போவதாக லட்சுமி மிட்டல் தெரிவித்துள்ளார். இதில் ஆண்டுக்கு 2.4 லட்சம் தன் இரும்பு உற்பத்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

டாடா நிறுவனம் குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையும், லித்தியம் பேட்டரி ஆலையும் அமைக்கும் என டாடா சன்ஸ் தலைமை அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். குஜராத்தின் ஹசீராவில் இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் ஆலை அமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதுவரை தாங்கள் செய்துள்ள முதலீடுகளில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய பொருளாதாரம் 2047ம் ஆண்டில் 35 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மாருதி சுசுகி நிறுவனம் குஜராத்தில் 2வது கார் ஆலையை அமைக்கு என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் குஜராத்தில் தங்கள் கார் உற்பத்தி ஆண்டுக்கு 40 லட்சமாக உயரும் என்று அவர் கூறினார்.

The post விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் குஜராத்தில் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்கா அமைக்கப்படும்: அதானி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gautam Adhani ,Gandhinagar ,Modi ,Energy ,Adani ,Dinakaran ,
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...