- மும்பை தாக்குதல்
- ஐநா பாதுகாப்பு கவுன்சில்
- நியூயார்க்
- மும்பை பயங்கரவாத தாக்குதல்
- ஹபீஸ்
- மும்பை
- தாக்குதல்
நியூயார்க்: மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவனுக்கு 78 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருபவரும், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்து வருகிறார். அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டிசம்பரில் கூட இதே கோரிக்கையை இந்தியா முன்வைத்தது. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சில மாதங்களுக்கு முன் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சில திருத்தங்களைச் செய்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், ஹபீஸ் சயீத்தின் உதவியாளருமான பாபிஸ் அப்துல் சலாம் உயிரிழந்ததையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்துள்ளது. இதற்கிடையே ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐநாவால் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹபீஸ் சயீத், கடந்த 2020 முதல் பாகிஸ்தான் சிறையில் இருந்து வருகிறார். தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏழு தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கி குற்றச்சாட்டின் அடிப்படையில், பாகிஸ்தான் நீதிமன்றம் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத தலைவனுக்கு 78 ஆண்டு சிறை: ஐநா பாதுகாப்பு கவுன்சில் தகவல் appeared first on Dinakaran.